என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (26 முதல் 30 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 26 வது நூல்  (டிசம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 25 வது நூல்

 புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, மார்ச் 2002. 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
152 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 128வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும், அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2001 ஆகஸ்ட் 12ம் திகதி நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 160 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின் ஒரு தொகுதிப் புகைப்படங்கள் நூலின் அட்டையை அலங்கரிக்கின்றன. 2002 புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2022)


 எனது 27 வது நூல்   (ஏப்ரல் 2002)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 26 வது நூல்

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5 (வழிகாட்டி நூல்)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 7வது பதிப்பு, மே 2005, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருணாகலை வீதி).
36 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 15X10.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக்கூடிய வசனக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட 26 கட்டுரைகள் சேர்க்கப்பட் டுள்ளன. இலங்கையில், வசனக் கட்டுரை அடிப்படையில் தரம் 5 மாணவர்களுக்காக வெளிவந்த முதல் நூல் இதுவென்று கருதப்படுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3305)



 எனது 28 வது நூல்  (நவம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 27 வது நூல்

புலமைப்பரிசில் விவேகக்களஞ்சியம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 6வது பதிப்பு, மார்ச் 2004. 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
(26), 190 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 177வது வெளியீடு. 2003ம் ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும், விடைகளும் அடங்கியுள்ளன. 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2021)


 எனது 29 வது நூல்   (ஜனவரி 2003)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 28 வது நூல்

 2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2ம் பதிப்பு, பெப்ரவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 2003. Print Com (Pvt) Ltd., 134 Hulfsdrop Street)
152 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு 28X21.5 சமீ.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 153வது வெளியீடாக முதலாம் பதிப்பும், 159வது வெளியீடாக 2வது பதிப்பும் வெளிவந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2003ம் ஆண்டிலும், அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கற்றலை இலகுவாக்கும் முறையில் வழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. 24 மாதிரி வினாப்பத்திரங்கள் (பகுதி 1இல் 12 வினாப்பத்திரங்களும், பகுதி 2ல் 12 வினாப்பத்திரங்களும்) சேர்க்கப்பட்டுள்ளன. 2002; ஆகஸ்ட் 10ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 91 மாணவமணிகளின் பெயரப்பட்டியலின் முதல் தொகுதி இந்நூலில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4275)



 எனது 30 வது நூல்  (நவம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 29 வது நூல்

புலமைச் சுடர் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2003. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).
80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5X14 சமீ.

சிந்தனை வட்டத்தின் 164வது வெளியீடு. 2003ஆம் ஆண்டிலும் அதன் பின்பும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2015)