என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (36 முதல் 40 வரை) - மஸீதா புன்னியாமீன்



 எனது 36 வது நூல்  (செப்டெம்பர் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 35 வது நூல்

புலமைப்பரிசில் புலமைத் தீபம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் புலமைத் தீபம்.  பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (Kandy: Creative Printers & Designers, No.3/A Bahiravakanda Road)
240 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28X21.5 சமீ., ISBN: 955-8913-17-0.

சிந்தனை வட்டத்தின் 190வது வெளியீடு. 2005 ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 30 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2004 ஆகஸ்ட் அரசாங்க வினாப்பத்திரமும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2020)
 



 எனது 37 வது நூல்   (ஒக்டோபர் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 36 வது நூல்

 தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை)
(2), 78 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 27X21 சமீ., ISBN: 955-8913-38-4

இது சிந்தனை வட்டத்தின் 195வது வெளியீடு. 2005ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தரம் 04 க்குரிய மாணவர் வழிகாட்டி. மாதிரி வினாப்பத்திரங்களும் விடைக ளும் கொண்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய மதிப்பெண்களை எவ்வாறு பெறலாம் என்ற அறிவுரை மிகவும் எளிய நடையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3004)



 எனது 38 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 37 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1.
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-39-1.

சிந்தனை வட்டத்தின் 198வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். மாணவர்களுக்கு எழக்கூடிய கணிதம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தெளிவான விளக்கத்தை இவ்வழிகாட்டி நூல் வழங்குகின்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் கணிதம் ஒரு தனி வினாத்தாளாக இடம்பெறாவிடினும் கூட பகுதி 1 இல் தர்க்க ரீதியான, புலமை ரீதியான கணித அறிவு அளவிடப்படும். அதற்கேற்ற வகையில் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல் தேட்டம் பதிவிலக்கம் 2007)



 எனது 39 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 38 வது நூல்

 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவா...கியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-40-5

சிந்தனை வட்டத்தின் 199வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் பத்து இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆக்கத் திறனை விருத்திசெய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இப்புத்தகத்தில் இலங்கையின் தேசிய பறவையான காட்டுக்கோழி பற்றியும், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் பற்றியும், தேசிய மலரான நீலோற்பலம் (நீலஅல்லி) பற்றியும், தேசிய மரமான நாகமரம் பற்றியும் குறிப்புகள் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப் பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2008




எனது 40 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 39 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-22-7.

சிந்தனை வட்டத்தின் 201வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். பாடரீதியான எவ்வளவு விளக்கங்களை மாணவர்கள் பெற்றாலும்கூட பரீட்சையொன்றில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியெய்த பயிற்சி அவசியமானது. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்துகளையும் முகமாக பத்து மாதிரி வினாத்தாள்களை (பகுதி1, பகுதி 2) உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2009)