என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (6 முதல் 10 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 6 வது நூல்  (ஜுன் 1997)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 6 வது நூல்

 அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும். (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானமும் ,ஆங்கிலமும். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுன் 1997. (Colombo 12: AICO Ltd., 218/5, Messenger Street)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடவழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. அறிமுக விஞ்ஞானம் பற்றியும், ஆங்கிலம் பற்றியும் பாடப் பரப்பில் இடம்பெறும் குறிப்புக்களை எளிய நடைமுறையில் விளக்குகின்றது. புலமைப் பரிசில் பரீட்சையில் விஞ்ஞானம் ஆங்கிலம் தனி வினாப்பத்திரங் களாக இடம்பெறாவிடினும் கூட பகுதி 1, பகுதி 2 வினாப்பத்திரங்களில் இவை இணைக்கப்படும். அதற்கேற்ற வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2340)




 எனது 7 வது நூல் (பெப்ரவரி 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 7 வது நூல்

அறிமுக விஞ்ஞானம் - தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானம் -  தொகுதி 1. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன,1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப் பரிசில் வழிகாட்டித் தொடர் 4. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. இத் தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும், சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2338)




 எனது 8 வது நூல் (ஏப்ரல் 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 8 வது நூல்

அறிமுக விஞ்ஞானம் - தொகுதி 2  ( வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள  நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

அறிமுக விஞ்ஞானம் - தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன்ää மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
64 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 5. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை உள்ளடக்கியது. இத்தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும், சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2339)



 எனது 9 வது நூல் (ஏப்ரல் 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 9 வது நூல்

 நாமும் சுற்றாடலும் - தொகுதி 1. (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

நாமும் சுற்றாடலும் - தொகுதி 1. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 6. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை உள்ளடக்கியது. இத்தொகுதி எமது அயலில் காணப்படும் தாவரங்கள், பிராணிகள், சுற்றாடலின் கோலங்கள், புவியும் வானும், வேலைகளை இலகுவாக்கும் முறைகள், எமது உணவு, எமது பரிபாலன முறைகள் ஆகிய பாட அலகுகளை உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2342)



 எனது 10 வது நூல்  (ஏப்ரல் 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 10 வது நூல்

புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 1  (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள... நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 1. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி)
82 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 28X22 சமீ.

இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தினால் மாணவர்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் முதலாவது போட்டிப் பரீட்சை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையாகும். இத்தகைய மாணவர்களை வழிநடத்தக் கூடிய வகையில் புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் நூலாசிரியர்கள் பல புலமைப் பரிசில் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். இந்த அடிப்படையில் இவர்களின் மற்றுமொரு புலமைப்பரிசில் நூலான இந்நூலில் 1999/2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3009)