என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (11 முதல் 15 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 11 வது நூல்  (ஏப்ரல் 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 11 வது நூல்

புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 2  (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள... நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி) 76 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 28X22 சமீ.


1999/2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. தமது மாணவர் வாழ்க்கையில் முதலா வது போட்டிப் பரீட்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வகையில் படிப்படியான விளக்கத்தை வழங்கத்தக்கதாக இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3010)



 எனது 12 வது நூல்  (ஏப்ரல் 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 12 வது நூல்

 புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 3. (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி- தொகுதி 3. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தோட்டை: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி)
76 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 28x22 சமீ.

1999/2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. இந்நூல் 3 தொகுதிகளில் வெளிவந்துள்ளது. தமது மாணவர் வாழ்க்கையில் முதலாவது போட்டிப் பரீட்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வகையில் படிப்படியான விளக்கத்தை வழங்கத்தக்கதாக இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3011)



 எனது 13 வது நூல்   (மே 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 13 வது நூல்

நாமும் சுற்றாடலும் - தொகுதி 02 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

நாமும் சுற்றாடலும் - தொகுதி 2. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, மே 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
48 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.

புலமைப் பரிசில் வழிகாட்டித் தொடர் 7. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. பழக்க வழக்கங்களும் பொறுப்புக்களும், நாமும் போக்குவரத்தும், நாம் எவ்வாறு வளர்கிறோம், எமது வளர்ச்சிக்குத் தடையாக அமைவன, பொது அறிவு விடயங்கள் ஆகிய பாட அலகுகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2343)



 எனது 14 வது நூல்   (மே 1998)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 14 வது நூல்

புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி  (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 3ம் பதிப்பு, அக்டோபர் 2002, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)
64 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 28X21.5 சமீ.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தரம் 4 பாடத்திட்டத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட 10 மாதிரி வினாத்தாள்கள் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வினாப்பத்திரங்களுக்கான விடைகளும், மேலதிக விளக்கத்துக்கான உசாத்துணைக் குறிப்புகளும் உருவப்படங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2310)



 எனது 15 வது நூல்  (ஜனவரி 1999)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 15 வது நூல்

 புலமைப்பரிசில் வழிகாட்டிக்களஞ்சியம். (வழிகாட்டி நூல்)

 ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802, சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 3ம் பதிப்பு: அக்டோபர் 2002, 1வது பதிப்பு: ஜனவரி 1999. 64 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தரம் 4, தரம் 5 பாடத்திட்டத்தைத் தழுவிய குறிப்புகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்புக்களை எளிமையாக மாணவர்கள் விளங்கத்தக்க வகையில் பொருத்தமான இடங்களில் புகைப்படங்களையும், சித்திரங்களையும் சேர்த்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4311)

(படம் 3ம் பதிப்புக்குரியது)