என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (46 முதல் 50 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 46 வது நூல் (ஒக்டோபர் 2005)

மப்ரூஹா அபூபக்கர் உடன் இணைந்து எழுதியது

உந்துசக்தி

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

உந்துசக்தி: விஞ்ஞான மன்ற சிறப்புமலர். மஸீதா புன்னியாமீன், மப்ரூஹா அபூபக்கர் (இதழாசிரியர்கள்). வத்தேகம: வத்தேகம, தெல்தெனிய வலய விஞ்ஞான மன்றம், வலயக் கல்விப் பணிமனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (உடத்தலவின்ன: சிந்தனைவட்டம், இல. 14, உடத்தலவின்னை மடிகே)

48 பக்கம், விலை: இலவசம், அளவு: 25X18.5 செ.மீ

வத்தேகம – தெல்தெனிய வலய (தமிழ்ப்பிரிவு) விஞ்ஞான ஆசிரியர் கழகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்ட 2005ம் ஆண்டுக்கான விஞ்ஞான தினச் சிறப்பு மலர் இதுவாகும். இதில் இப்பிரதேச மாணவர்களினதும், ஆசிரியர்களிதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

(நூல்தேட்டம் பதிவிலக்கம் 3252)



எனது 47 வது நூல் (மே 2006)
எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் 
இணைந்து  எழுதிய 45 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3)

.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110 அளவு 27X21.5 சமீ., ISBN: 955-8913-33-2.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 219வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் மாதிரிவினாத்தாள்களுடன், கணிதப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக விளங்கக் கூடிய வகையில் எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4267)
 


 எனது 48 வது நூல் (மே 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் 
இணைந்து எழுதிய 46 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 27X21.5 சமீ. ISBN: 955-8913-34-0.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 220வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந் நூலில் மாதிரி வினாத்தாள்களுடன், ஆங்கிலப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் படங்களுடன் சுருக்கக் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்து நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டு இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4268)



 எனது 49 வது நூல் (நவம்பர் 2006)

விஞ்ஞான வினாச்சரம்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

விஞ்ஞான வினாச்சரம். மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன  மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).
128 பக்கம், படங்கள், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு: 28.5X21 சமீ., ISBN: 955-8913-54-5.

க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்தில் பகுதி 1இல் இடம்பெறக்கூடிய பல்தேர்வு வினாக்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தரம் 10 இல் 13 பாட அலகுகளும், தரம் 11 இல் 12 பாட அலகுகளும் இவ்வினாச்சரத்தில் அலகுரீதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பயிற்றப்பட்ட கணித. விஞ்ஞான ஆசிரியையான நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் இதுவரை மொத்தமாக 48 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தனது கணவர் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீனுடன் இணைந்து 46 தரம் 5 புலமைப் பரிசில் நூல்களையும், கலைமகள் ஹிதாயா ரிஸ்வியுடன் இணைந்து இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை என்னும் கவிதை நூலையும் எழுதியுள்ளார். க.பொ.த (சா/த) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்தை மையமாகக்கொண்டு இவர் எழுதியுள்ள முதல் நூல் இதுவாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4323)



எனது 50 வது நூல் (நவம்பர் 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 47 வது நூல்


2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1).


.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006, (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 97., அளவு 21X14 சமீ. ISBN: 955-8913-42-1

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, சித்தியடையும் மாணவர்களுக்கு உபகாரப்பணம் மாதந்தோறும் வழங்கப்படுவதினாலும் நகர்புறங்களிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படு வதினாலும் இலங்கையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. 2007ம் ஆண்டு இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக எழுதப்பட்டதே மேற்படி நூலாகும். இது சிந்தனைவட்டத்தின் 237வது வெளியீடாகும். அதேபோல நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் எழுதி வெளியிடும் 50வது நூலுமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4269)